டிவி உரிமம் குறித்த தகவல்கள்

பின்வருவனவற்றைச் செய்வதற்கு டிவி உரிமம் தேவைப்படும்:

 • தொலைக்காட்சியில் அல்லது ஆன்லைன் தொலைக்காட்சி சேவையில் நேரலையில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பது அல்லது பதிவு செய்வது
 • ஏதாவது பிபிசி நிகழ்ச்சிகளை ஐப்ளேயரில் பார்ப்பது.

டிவி, டெஸ்க்டாப் கணினி, லேப்டாப், மொபைல் ஃபோன், டேப்லெட், கேம்ஸ் கன்சோல், டிஜிட்டல் பாக்ஸ் அல்லது டிவிடி/விஎச்எஸ் ரெக்கார்டர் போன்றவை உட்பட எந்தவொரு சாதனத்தில் பார்த்தாலும் இது பொருந்தும்.

ஒரு சாதாரணமான கலர் டிவி உரிமத்திற்கான கட்டணம் £154.50. நீங்கள் இதை ஒரே தடவையில் செலுத்தலாம் அல்லது பல தவணைகளில் செலுத்தலாம். நீங்கள் பணம் செலுத்தக்கூடிய பல்வேறு வழிகள் பற்றி, தொழில்களுக்கான உரிமங்கள் பற்றி, மற்றும் உங்களுக்கு சலுகை பெற தகுதி உண்டா என்பது பற்றியும் இந்த பக்கம் தெரிவிக்கிறது.

இந்தப் பக்கத்திலுள்ள இணைப்புகள் ஆங்கில மொழியில் உள்ள பக்கங்களுக்குச் செல்லும். நீங்கள் எங்களிடம் பேச விரும்பினால், தயவுசெய்து எங்கள் மொழி உதவிமையத்தை இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும் 0300 790 6044*.

 
உங்களுக்கு டிவி உரிமம் தேவையா?

யுனைடெட் கிங்டம், சானல் ஐலண்ட்ஸ், மற்றும் ஐல் ஆஃப் மேன் ஆகிய இடங்களில் நீங்கள் பின்வருபவற்றைச் செய்ய விரும்பினால், உங்களுக்கு டிவி உரிமம் தேவையாகும்:

 • எந்த சானலிலும் அல்லது சாதனத்திலும் (எந்த மொழியிலும், உலகில் எங்கிருந்தும் பெறப்பட்ட) டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது அல்லது பதிவு செய்வதற்கு, அல்லது
 • பிபிசி நிகழ்ச்சிகளை ஐப்ளேயரில் பதிவிறக்கம் செய்வது அல்லது பார்ப்பது .

இது நீங்கள் பயன்படுத்தும் எந்த சாதனத்திற்கும் வழங்குநருக்கும் பொருந்தும், இவை உட்பட:

 • டிவி பெட்டிகள் (ஸ்மார்ட் டிவிக்கள் உட்பட)
 • டிவிடி, ப்ளூ-ரே மற்றும் விஹெச்எஸ் ரிகார்டர்கள்
 • லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கணினிகள்
 • டேப்லெட்கள், மொபைல் ஃபோன்கள் மற்றும் பிற போர்ட்டபிள் கருவிகள்
 • டிஜிட்டல் பாக்ஸ்கள் அல்லது பிவிஆர்கள் (ஸ்கை, வர்ஜின் மீடியா அல்லது பிடி டிவி போன்றவை)
 • கேம்ஸ் கன்சோல்கள்
 • மீடியா ஸ்ட்ரீமிங் கருவிகள் (அமேசான் ஃபயர் டிவி, ஆப்பிள் டிவி, க்ரோம்காஸ்ட், ரோகு மற்றும் நவ் டிவி)
 • ஃப்ரீவியூ, ஃப்ரீசாட் அல்லது யூவியூ

நீங்கள் பல கருவிகளை பயன்படுத்தினாலும் கூட, உங்களுக்கு வழக்கமாக ஒரு முகவரிக்கு ஒரு டிவி உரிமம் மட்டுமே தேவைப்படும். இணைந்த குடியிருப்பு ஒப்பந்தம் இல்லாத வீடுகளுக்கும் வியாபாரங்களுக்கும் வேறு நிபந்தனைகள் பொருந்தும், அப்போது ஒன்றுக்கு மேற்பட்ட உரிமங்கள் தேவைப்படலாம். உங்களுக்கு ஒரு இரண்டாவது வீடு இருந்தால், அந்த முகவரிக்கு தனி உரிமம் மட்டுமே தேவைப்படும். 0300 790 6044 எண்ணை அழைத்து மேலும் விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

ஒரு உரிமம் இல்லாமல், நீங்கள் எந்த சானலிலாவது அல்லது சாதனத்திலாவது நேரலை டிவி நிகழ்ச்சிகளை பார்த்தாலோ அல்லது பதிவு செய்தாலோ, அல்லது பிபிசி நிகழ்ச்சிகளை ஐப்ளேயரில் பதிவிறக்கம் செய்தாலோ அல்லது பார்த்தாலோ நீங்கள் சட்டத்தை மீறுகிறீர்கள். உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அபாயம் உள்ளது மற்றும் £1,000 வரை அபராதம் (கர்ன்சேயில் அதிகபட்ச அபராதம் £2,000 ஆகும்) மற்றும் சட்டப்படி செலவுகள் மற்றும்/அல்லது இழப்பீட்டை செலுத்துமாறு உங்களுக்கு ஆணையிடப்படலாம். ஸ்காட்லாந்தில், நடவடிக்கை எடுக்கவேண்டுமா வேண்டமா என்று ப்ரோக்யுரேடர் ஃபிஸ்கல் முடிவு செய்வார்.

S4C’s TV on demand அல்லது ரேடியோவை மட்டுமே பார்த்தால், BBC iPlayer -க்கான டிவி உரிமம் உங்களுக்குத் தேவையில்லை.

நீங்கள் சமீபத்தில் வீடு மாற்றினீர்களா?

நீங்கள் வீடு மாறியிருந்தால் அல்லது எங்களிடம் உள்ள உங்களைப் பற்றிய விவரங்கள் தவறானால் அல்லது அவை மாறியிருந்தால், தயவுசெய்து உங்கள் புது முகவரி விவரங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் அல்லது TV லைசென்சிங், டார்லிங்டன் DL98 1TL என்ற முகவரிக்கு எழுதவும்.

நீங்கள் நேரலை டிவி அல்லது பிபிசி ஐப்ளேயரை பார்ப்பதில்லையா?

நீங்கள் எப்போதுமே எந்த சானலிலும் அல்லது சாதனத்திலும் நேரலை டிவி நிகழ்ச்சிகளை பார்க்காவிட்டால் அல்லது பதிவு செய்யாவிட்டால், அல்லது பிபிசி நிகழ்ச்சிகளை ஐப்ளேயரில் பதிவிறக்கம் செய்யாவிட்டால் அல்லது பார்க்காவிட்டால் உங்களுக்கு டிவி உரிமம் தேவையில்லை. உங்களுக்கு உரிமம் தேவையில்லை என்றால் தயவுசெய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும் அல்லது 0300 790 6044* க்கு அழைக்கவும். வியாபாரங்களுக்கு வேறு நிபந்தனைகள் பொருந்தும்.

உங்களுக்கு உரிமம் தேவையில்லை என்று நீங்கள் கூறினால், உரிமம் உங்களுக்கு தேவைப்படாது என்று உறுதிசெய்துகொள்ள நாங்கள் உங்கள் இடத்திற்கு வருகை புரியலாம். இந்த வருகைகள் ஏன் அவசியம் என்றால், உரிமம் தேவையில்லை என்று கூறிய கிட்டத்தட்ட ஆறு நபர்களில் ஒருவருக்கு உரிமம் தேவை என்று எங்கள் வருகைகளில் நாங்கள் கண்டறிகிறோம்.

உங்கள் உரிமம் இனிமேல் உங்களுக்கு தேவையில்லையா?

உங்களுக்கு ஒரு டிவி உரிமம் இருந்திருந்து, ஆனால் நீங்கள் இனிமேல் எந்த சானலிலும் அல்லது சாதனத்திலும் நேரலை டிவி நிகழ்ச்சிகளை பார்க்காவிட்டால் அல்லது பதிவு செய்யாவிட்டால், அல்லது பிபிசி நிகழ்ச்சிகளை ஐப்ளேயரில் பதிவிறக்கம் செய்யாவிட்டால் அல்லது பார்க்காவிட்டால் உங்களுக்கு பணம் திரும்பப்பெற தகுதி இருக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள, தயவுசெய்து 0300 790 6044 எண்ணில் எங்களை அழைக்கவும்.

டிவி உரிமத்திற்கு எவ்வளவு செலவாகும்?

ஒரு கலர் டிவி உரிமத்திற்கான விலை ஒரு வருடத்திற்கு £154.50 ஆகும். நீங்கள் பார்வையில்லாதவராக இருந்தால் (தீவிரமாக பார்வை பாதிக்கப்பட்டவர்) அல்லது உங்கள் வயது 74 அல்லது அதற்கு மேல் இருந்தால், உங்களுக்கு ஒரு குறுகிய கால, குறைக்கப்பட்ட கட்டணம் அல்லது இலவச உரிமத்திற்கு உரிமை இருக்கலாம்.

நீங்கள் உங்கள் டிவி உரிமத்திற்கான தொகையை அல்லது புதிப்பித்தல் தொகையை ஆன்லைனில் டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு உபயோகித்து செலுத்தலாம். மாற்றாக, உரிமத்திற்கான தொகையை செலுத்துவதற்கான பல்வேறு வழிகள் எல்லாவற்றையும் கீழே காணலாம். நீங்கள் உங்கள் டிவி உரிமத்தை புதுப்பிப்பதாக இருந்தால், உங்களுக்கு உங்கள் தற்சமய உரிம எண் தேவைப்படும்.

உங்கள் டிவி உரிமத்திற்கான தொகையை எவ்வாறு செலுத்துவது

நீங்கள் இதை ஒரே தடவையில் செலுத்தலாம் அல்லது காலாண்டுக்கொரு முறை, மாதாமாதம் அல்லது வாராவாரம் செலுத்தலாம்.

நீங்கள் உங்கள் டிவி உரிமத்திற்கான தொகையை செலுத்துவதற்கு மிகச் சுலபமான வழி ஆன்லைனில் வழியாக டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு உபயோகித்து செலுத்துவது ஆகும்.

பணம் செலுத்துவதற்கான வழிகள்:

டைரக்ட் டெபிட்

நீங்கள் உங்கள் டிவி உரிமத்திற்கான தொகையை ஒரே தடவையில் செலுத்தலாம் அல்லது காலாண்டுக்கொரு முறை அல்லது மாதாமாதம் செலுத்தலாம். உங்கள் உரிமத்திற்கான தொகையை நாங்கள் தானாக எடுத்துக்கொண்டு விடுவோம், அதனால் பணம் செலுத்துவதை தவறவிடுவதற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

உங்கள் டைரக்ட் டெபிட் அமைக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு வருடமும் உங்கள் உரிமம் தானாகவே புதிப்பிக்கப்பட்டுவிடும், அதனால் உரிமம் இல்லாமல் இருக்கும் அபாயம் உங்களுகு எப்போதுமே இருக்காது.

நீங்கள் வீடு மாறினால், எங்களிடம் தெரிவிப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள், அப்போது தான் நாங்கள் உங்கள் டிவி உரிமத்தை உங்கள் புது முகவரிக்கு மாற்ற இயலும்.

நீங்கள் டைரக்ட் டெபிட் அமைப்பை ஆன்லைனில் அமைத்துக்கொள்ளலாம், அல்லது உங்கள் வங்கி விவரங்களை தயாராக வைத்துக்கொண்டு 0300 790 6044* எண்ணை அழைத்து அமைத்துக்கொள்ளலாம். நீங்கள் காலாண்டுக்கு ஒருமுறை தொகையை செலுத்த முடிவு செய்தால், ஒவ்வொரு முறை செலுத்தும்போதும் £1.25 ப்ரீமியம் சேர்க்கப்படும் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.

டெபிட்/க்ரெடிட் கார்டு

உங்கள் டிவி உரிமத்திற்கான தொகையை ஆன்லைனில் டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு மூலமாக செலுத்துங்கள் அல்லது தொலைபேசி வாயிலாக செலுத்துங்கள் அல்லது பேபாயின்ட்-இல் (அல்லது சானல் ஐலண்ட்ஸ்-இல் தபால் நிலையம்) உங்கள் டெபிட் கார்டு வழியாக செலுத்துங்கள். பணம் செலுத்தும்போது உங்கள் விவரங்கள் தயாராக இருப்பதை தயவுசெய்து உறுதிசெய்துகொள்ளவும். நீங்கள் உங்கள் டிவி உரிமத்தை புதுப்பிப்பதாக இருந்தால், உங்களிடம் உங்கள் தற்சமய உரிம எண் இருந்தால் உதவியாக இருக்கும்.

டிவி உரிமத்திற்கான தொகை செலுத்தும் அட்டை

உங்கள் டிவி உரிமத்திற்கான தொகையை நீங்கள் ஒரு தொகை செலுத்தும் அட்டையுடன் வாரத்திற்கு £6 முதல் பரப்பிக்கொள்ளலாம். ஆன்லைனில், தொலைபேசி வாயிலாக, வாசக குறுஞ்செய்தி வாயிலாக அல்லது ஏதாவது பேபாயின்ட் (அல்லது சானல் ஐலண்ட்ஸ்-இல் தபால் நிலையம்) வழியாக செலுத்த நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். நீங்கள் உங்கள் டிவி உரிமத்தை புதுப்பிப்பதாக இருந்தால், உங்களிடம் உங்கள் தற்சமய உரிம எண் இருந்தால் உதவியாக இருக்கும்.

மேலும் விவரத்திற்கு அல்லது உங்கள் தொகை செலுத்தும் அட்டைக்கு விண்ணப்பிக்க, 0300 555 0286 எண்ணை அழைக்கவும். இந்த அழைப்பு ஆங்கிலத்தில் பதிலளிக்கப்படும், ஆனால் உங்கள் மொழி பேசும் யாருடனாவது பேசவேண்டும் என நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.

பணம் எங்கு செலுத்துவது:

ஆன்லைன்

எமது இணையதளத்தில் நீங்கள் உங்கள் டிவி உரிமத்திற்கான தொகையை செலுத்தலாம் மற்றும் உங்கள் டிவி உரிமத்தின் விவரங்களை நிர்வகிக்கலாம். உங்கள் டிவி உரிமத்தையும் வேறு ஏதாவது தகவல்களை மின்னஞ்சல் வழியாகப் பெற நீங்கள் எங்களைக் கேட்டுக்கொள்ளலாம், ஆனால் உங்கள் மின்னஞ்சல் முகவரி ஆங்கில மொழி எழுத்துக்களையும் எண்களையும் மட்டுமே கொண்டிருக்கலாம்.

உங்கள் டிவி உரிம்த்திற்கான தொகையை டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது டைரெக்ட் டெபிட் அமைத்துக்கொண்டு செலுத்தலாம்.

உங்கள் வங்கி விவரங்களை தயவுசெய்து தயாராக கையுடன் வைத்திருங்கள் மற்றும் பணம் செலுத்துதல் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

தொலைபேசி

உங்களிடம் – மேஸ்ட்ரோ, டெல்டா, சோலோ, விசா அல்லது மாஸ்டர்கார்டு போன்ற – டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு இருந்தால், நீங்கள் 0300 790 6044* எண்ணை அழைப்பதன் மூலம் உங்கள் டிவி உரிமத்தை செலுத்தலாம். உங்கள் கார்டு விவரங்களை கையில் வைத்திருப்பதை தயவுசெய்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

பேபாயின்ட்

நீங்கள் எந்த பேபாயின்டுக்கும் சென்று பணம் செலுத்தி அல்லது டெபிட் கார்டு வழியாக டிவி உரிமத்தை வாங்கலாம். உங்கள் பெயர் மற்றும் முகவரியை மட்டும் நீங்கள் கடை உதவியாளரிடம் கொடுத்தால் போதுமானது.

யுகே-யில் 28,000 க்கும் மேற்பட்ட பேபாயின்டுகள் உள்ளன, இவற்றை நீங்கள் கன்வீனியன்ஸ் ஸ்டோர்கள், நியூஸ் ஏஜென்டுகள், ஆஃப்-லைசென்சுகள், சூப்பர் மார்கெட்டுகள், மற்றும் பெட்ரோல் பம்புகளில் காணலாம். இவற்றில் பல நீண்ட நேரம் திறந்திருக்கும், வாரத்தில் ஏழு நாட்களும். உங்கள் அருகாமையிலுள்ள பேபாயின்ட் இடத்தை நீங்கள் இங்கு அறியலாம் அல்லது 0300 790 6137* எண்ணில் அழைத்து உங்கள் போஸ்ட்கோடை கொடுத்துக் (இது ஆங்கில மொழியில் மட்டுமே இருக்கும் ஒரு தானியங்கி சேவை) கண்டறியலாம்.

சானல் ஐலண்ட்ஸ்-இல் பேபாயின்ட் எதுவும் இல்லை. மாறாக, நீங்கள் எந்த தபால் நிலைய கிளையிலும் தொகையை செலுத்தலாம்.

அஞ்சல்

நீங்கள் காசோலையை TV Licensing, Darlington DL98 1TL க்கு அனுப்பலாம். காசோலையை முழு உரிமக் கட்டணத்திற்கான தொகைக்கு 'TV Licensing' என்ற பெயருக்கு எழுதவும் மற்றும் காசோலையின் பின்புறம், உங்கள் பெயர், முகவரி மற்றும் போஸ்ட்கோடை எழுத மறக்கவேண்டாம். தயவுசெய்து ரொக்கப் பணமாக அனுப்ப வேண்டாம்.

உங்களுக்கு சலுகை கிடைக்குமா?

நீங்கள் பார்வையற்றவரானால் (தீவிரமான பார்வைக் குறைபாடு), உங்களுக்கு 50% சலுகைக்கு தகுதி இருக்கலாம். உங்கள் வயது 74 அல்லது அதற்கு மேல் இருந்தால், உங்களுக்கு ஒரு குறுகிய கால அல்லது இலவச உரிமத்திற்கு உரிமை இருக்கலாம்.

அரசாங்கத்தால் நிதியுதவி அளிக்கப்படுகின்ற, 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இலவச டிவி உரிமம் திட்டம் 1 ஜூன் 2020 தேதியில் இருந்து மாற்றப்படுகிறது.

நீங்கள் பின்வரும் நிலையில் இருப்பவரா அல்லது உங்களுடன் வசிக்கும் யாரேனும் இந்நிலைகளில் ஒன்றில் உள்ளனரா:

 • 75 வயது அல்லது அதற்கு மேல்? உங்களுக்கு இலவச டிவி உரிமம் பெற தகுதி இருக்கலாம். விண்ணப்பிக்க, எந்த நபருக்கு நீங்கள் விண்ணப்பிக்கிறீர்களோ, அந்த நபரின் தேசிய காப்பீட்டு எண்ணுடனோ அல்லது அது இல்லையென்றால் மற்றொரு வயதுச் சான்றுடனோ 0300 790 6044* எண்ணை அழைக்கவும்.
 • 74 வயதானவரா? உங்களுடைய 75-வது பிறந்தநாள் வரும் வரை குறுகிய கால டிவி உரிமத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள, தயவுசெய்து 0300 790 6044 எண்ணில் அழைக்கவும்.
 • பார்வையற்றவரா, மற்றும் அதற்கான முறையான சான்றையும் வழங்க முடியும் என்றால்? 50% சலுகையைப் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவர். உங்களுக்குப் பகுதியளவு பார்வை (பார்வைக் குறைபாடு) இருந்தால் உங்களுக்குத் தகுதி இருக்காது. விண்ணப்பிக்க, tvlicensing.co.uk/blind என்ற இணைய முகவரிக்குச் செல்லவும் அல்லது உங்கள் பார்வையின்மை பதிவு ஆவணம் அல்லது கண்ணியல் நிபுணரிடமிருந்து பெற்ற சான்றிதழ் போன்றவற்றின் நகலையும் உங்கள் உரிம எண், தொலைபேசி எண் மற்றும் காசோலை கட்டணம் ஆகியவற்றையும் TV Licensing, Blind Concession Group, Darlington DL98 1TL என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கவும்.
வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்கள்

உங்கள் வியாபாரத் தலத்தில் அதன் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது விருந்தினர்கள் எந்த சானலிலாவது டிவி நிகழ்ச்சிகளை பார்த்தாலோ அல்லது பதிவு செய்தாலோ அல்லது ஐப்ளேயரில் பிபிசி நிகழ்ச்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ அல்லது பார்த்தாலோ, அந்தத் தலத்திற்கு ஒரு டிவி உரிமம் தேவையாகும். இது நீங்கள் அளித்திருக்கும் எந்த சாதனத்திற்கும் பொருந்தும், அதே போல், மெயின்களில் பொருத்தப்படும் அவர்களது எந்த சொந்த சாதனங்களுக்கும் பொருந்தும்.

உங்கள் வியாபாரத்திற்கு ஒரு இடம் மட்டுமே இருந்தால், உங்களுக்கு ஒரு டிவி உரிமம் மட்டுமே தேவை. உரிமத்திற்கான கட்டணம் ஒவ்வொரு முகவரிக்கும் வருடத்திற்கு £154.50ஆகும் மற்றும் இது அந்த முகவரியில் பயன்படுத்தப்படும் எல்லா சாதனங்களுக்கும் பொருந்தும். ஒரு டிவி உரிமத்திற்கான தொகையை செலுத்துவதற்கு மிகச் சுலபமான வழி ஆன்லைன் வழியாக டெபிட் அல்லது க்ரெடிட் கார்டு உபயோகித்து செலுத்துவது ஆகும்.

ஒரு முகவரிக்கு மேல் உங்களுக்கு தேவை இருந்தால், அதற்கு மிகச் சுலபமான வழி நிறுவன குழு டிவி உரிமம் ஆகும். நீங்கள் எந்த படிவத்தையும் நிரப்பவேண்டியதில்லை. நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஒரு முறை மட்டும் தொகையை செலுத்தவேண்டும் மற்றும் அதற்காக ஒரே ஒரு நினைவூட்டல் மட்டும் ஒரு முகவரிக்கு அனுப்பபடும். நிறுவன குழு டிவி உரிமத்திற்கு கட்டணம் செலுத்துவதற்காக, 0300 790 6165* என்ற எண்ணில் எங்களை அழைக்கவும், உங்களுக்கு மகிழ்ச்சியுடன் நாங்கள் உதவுவோம்.

டிவி உரிமம் பின்வருபவற்றுக்கு பொருந்தாது:

 • உங்கள் தலத்திலுள்ள குடியிருப்பு வசதிக்கு,
 • உங்கள் தலத்திலுள்ள நல்வாழ்வு அல்லது சமூக சங்கங்கள், ஆனால் வேறொருவரால் நடத்தப்படுவது,
 • நீங்கள் வாடகைக்கு விட்ட பிற நிறுவனங்களுக்கு, அல்லது
 • விருந்தோம்பல் பகுதிகள்.

ஓட்டல்கள், ஹாஸ்டல்கள், மொபைல் யூனிட்டுகள் மற்றும் கேம்ப்சைட்களுக்கு வேறு விதிகள் உள்ளன.

நினைவில் கொள்க: உங்கள் வளாகத்தில் வைத்து ரேடியோ, டிவி, கம்யூட்டர் அல்லது CD/DVD மூலம் வாடிக்கையாளர்கள் அல்லது ஊழியருக்கு இசை எப்போதாவது இயக்கப்பட்டால் - பெரும்பாலும் நீங்கள் PPLPRS -இலிருந்து இசை உரிமத்தை நீங்கள் வாங்க வேண்டியிருக்கும். கூடுதல் தகவலுக்கு www.pplprs.co.uk for -க்குச் செல்லவும்.

ஒரு சாதரணமான டிவி உரிமத்தின் விதிகள் நிபந்தனைகள் யாவை?

நீங்கள் என்றால் உரிமத்தில் உள்ள நபரின் பெயர் என்று பொருளாகும்.

டிவி உரிமம் எதற்குத் தேவை?

உரிமம் அளிக்கப்பட்ட இடத்தில் டிவி பெறும் கருவியை பயன்படுத்தவும் அமைக்கவும். இது பின்வருபவற்றுக்குப் பொருந்தும்:

 • தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படும்போது அல்லது ஆன்லைன் தொலைக்காட்சி சேவையில் நேரலையில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிகளை பார்ப்பது மற்றும் பதிவு செய்வது, இதில் இணையம் வழியாக ஸ்ட்ரீம் செய்யப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் யுகே-க்கு வெளியேயிருந்து ஸ்ட்ரீம் செய்யப்படும் நிகழ்ச்சிகள் கூட அடங்கும்.
 • ஆன்-டிமாண்ட் பிபிசி நிகழ்ச்சிகளை பார்ப்பதும் பதிவிறக்கம் செய்வதும், இவற்றில் பிபிசி ஐப்ளேயரில் கேச் அப் டிவி கூட அடங்கும்.

இது எந்த கருவியாகவும் இருக்கலாம், இவற்றில் டிவிக்கள், டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப்கள், மொபைல் ஃபோன்கள், டேப்லெட்கள், கேம்ஸ் கன்சோல்கள், டிஜிட்டல் பாக்ஸ்கள் டிவிடிக்கள், ப்ளூ-ரே மற்றும் விஎச்எஸ் ரெக்கார்டர்கள் அல்லது வேறு ஏதாவதும் அடங்கும்.

உரிமம் டிவி சாதனத்தை பயன்படுத்துவதற்கும் பின்வரும் இடத்தில் அமைத்துக்கொள்வதற்கும் அனுமதிக்கிறது:

 • உரிமம் அளிக்கப்பட்ட இடத்தில், யாராலும்.
 • ஒரு வாகனத்தில், படகில் அல்லது காரவானில் பின்வருபவர்களால்:
  • நீங்கள் மற்றும் உரிமம் அளிக்கப்பட்ட இடத்தில் உங்களுடன் வழக்கமாக வசிக்கும் யாராவது (சுற்றிவராத காரவான்களில் உரிமையளிக்கப்பட்ட இடத்தில் யாராவது டிவி பார்த்துக்கொண்டிருந்தால் அல்லது பதிவு செய்துகொண்டிருந்தல் தவிர).
  • உரிமையளிக்கப்பட்ட இடத்தில் சாதாரணமாகப் பணியாற்றும் யாராவது (வாகனம், படகு அல்லது காரவான் ஒரு தொழில் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் வரை).
 • நீங்கள் மற்றும் உரிமம் அளிக்கப்பட்ட இடத்தில் உங்களுடன் வழக்கமாக வசிக்கும் யாராவது உள் பாட்டரிகளால் செய்யப்படும் டிவி சாதனத்தின் பயன்பாடு.

உரிமம் சாதாரணமாக பின்வருபவற்றுக்கு பொருந்தாது:

 • வாடகைக்கு குடியிருப்பவர்கள், தங்குபவர்கள் அல்லது கட்டணம் செலுத்தும் விருந்தினர்கள் மட்டுமே வசிக்கும் பகுதிகள்.
 • எல்லாம் உள்ளடங்கிய பகுதிகள்.
 • தனியான சட்ட ஏற்பாடுகளுக்குட்பட்ட பகுதிகள்.
 • வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் வியாபார தலப் பகுதிகள்.

கருப்பு வெள்ளை உரிமங்கள்

உங்களிடம் கருப்பு வெள்ளை டிவி இருந்தாலும் கூட, நிகழ்ச்சிகளை பதிவு செய்ய உங்களுக்கு ஒரு கலர் உரிமம் வேண்டும். இது ஏனெனில், டிவிடி, விஹெச்எஸ் மற்றும் டிஜிட்டல் பாஅக்ஸ் ரிகார்டர்கள் வண்ணத்தில் பதிவு செய்கின்றன. டிவி நிகழ்ச்சிகளை பதிவு செய்யமுடியாத ஒரு டிஜிட்டல் பாக்ஸை நீங்கள் உபயோகித்தால் மட்டுமே கருப்பு வெள்ளை உரிமம் செல்லுபடியாகும்.

மற்ற நிபந்தனைகள்

 • உங்கள் உரிமத்தை நாங்கள் இரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம். அதை நாங்கள் இரத்து செய்தால், உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.
 • உரிமத்தின் நிபந்தனைகளை நாங்கள் மாற்றினால், பிபிசி இணையதளத்தில் மற்றும் நாங்கள் பொருத்தமானதாகக் கருதினால் மற்ற தேசிய ஊடகங்களில் ஒரு பொது அறிவிப்பை நாங்கள் பிரசுரிப்போம்.
 • எங்கள் பதிவேடுகளை பரிசோதிக்கவும் டிவி பெறும் கருவியை பரிசீலிக்கவும் உரிமம் அளிக்கப்பட்ட இடத்திற்கு எமது அதிகாரிகள் வருகை தரலாம். நீங்கள் அவர்களை உள்ளே விடவேண்டியதில்லை.
 • டிவி பெறும் கருவி ரேடியோ அல்லது டிவி பெறுதல் மீது எந்த நியாயமற்ற குறுக்கீடுகளையும் ஏற்படுத்தக்கூடாது.

உங்களுக்கு டிவி உரிமம் தேவைப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போது சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

தயவுசெய்து கவனிக்கவும்:பின்வரும் டிவி உரிம வகைகளுக்கு தனி விதிகளும் நிபந்தனைகளும் பொருந்தும்: ஓட்டல் மற்றும் மொபைல் யூனிட்களின் டிவி உரிமம், ஏஆர்சி சலுகை டிவி உரிமம் மற்றும் பொழுதுபோக்கு யூனிட்கள் டிவி உரிமம். இவற்றில் ஒன்று உங்களிடம் இருந்தால், தயவுசெய்து குறிப்பிட்ட விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்காக உங்கள் உரிமத்தைப் பார்க்கவும் அல்லது தகவல்களுக்காக எங்களைத் தொடர்புகொள்ளவும்.

* எங்கள் 0300 எண்களுக்கான அழைப்புகள் 01 அல்லது 02 எண்ணுக்கான தேசிய ரேட் அழைப்புக்கு ஆவதை விட அதிகமாகாது, அது ஒரு அலைபேசியிலிருந்து இருந்தாலும் அல்லது தரைவழி தொலைபேசியிலிருந்து இருந்தாலும். தரைவழி தொலைபேசிகளிலிருந்து வரும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 9p வரை கட்டணம் வசூலிக்கப்படும், மற்றும் அலைபேசிகளிலிருந்து வரும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 8p முதல் 40p வரை கட்டணம் வசூலிக்கப்படும். உங்கள் அலைபேசி அல்லது தரைவழி தொலைபேசியுடன் உள்ளடங்கிய நிமிடங்கள் உங்களுக்கு கிடைத்தால், 0300 எண்ணுக்கு செய்யப்படும் அழைப்புகள் இதில் சேர்க்கப்படும்.

General information about TV Licensing is available in other languages: